வரவுசெலவுத் தி;ட்ட மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெறுகின்றது

வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தின் இறுதி நாள் இன்றாகும். நிதி பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு ஆகியவற்றின் நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான விவாதம் நடைபெறுகின்றது. விவாதத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டின் எதிர்;காலத்திற்காக பிரபல்யமற்ற தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். அவ்வாறான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படாமையாலேயே இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு அனைவரும் பொறுப்புக் கூற வேண்டும் என்று ஜனாதிபதி வலியுறுத்தினார். அரச சார்பற்ற பல்கலைக்கழகங்களை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான கலந்துரையாடல் இடம்பெறும் என்றும் இறுதித் தீர்மானத்தை ஜனவரி மாதத்தில் பெற்றக்கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்;;. மின்கட்டணம் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். இவ்வாறான நெருக்கடி மிக்க காலப்பகுதியில் மக்கள் தமது பொறுப்புக்களை விளங்கிக் கொண்டு செயற்படுவார்கள் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
மக்களுக்குத் தேவையான நிவாரணத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார். கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற நிதிக் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பாராளுமன்றத்திற்கு தெளிவுபடுத்தப்படவில்லை. பிழையான முகாமைத்துவம் காராணமாக நாடு இந்த நிலமைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
விவாதத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச பாடசாலை உபகரணங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வரியை நீக்குமாறு கோரிக்கை விடுத்தார். நாடு சீர்குலைவதற்கு தாக்கம் செலுத்திய விடயங்கள் தொடர்பில் ஆழமாக ஆராயப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
2026ஆம் ஆண்டளவில் நிலைபேறான எரிசக்தியை 2800 மெகா வொற் வரை அதிகரிப்பது அரசாங்கத்தின எதிர்பார்ப்பாகும் என அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்தார்;. நீர் மற்றும் காற்று வலு மின் நிலையங்களை அரசாங்கத்தின் கீழ் வைத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். கடந்த ஒக்டோபர் மாதம் வரை மின்சார சபை அடைந்துள்ள நட்டம் 112 பில்லியன் ரூபாவாகும். இதனை சீர்செய்வதற்கு உரிய திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
நிவாரணம் வழங்கும் முறையில் மாற்றம் தேவை என பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி. தொளவத்த குறிப்பிட்டார். ஐஸ் போதைப் பொருளை நாட்டிற்கு இலவசமாக வழங்கி எதிர்கால இளம் சந்ததியினரை சீரழிக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார். இதனைக் கட்டுப்படுத்துவதும் பாடசாலை மாணவர்களை அதிலிருந்து விடுவிப்பதும் அனைவரினதும் பொறுப்பாகும். போலி வியாபாரிகளினால் நாட்டிற்குக் கிடைக்கும அந்நியச் செலாவணி இல்லாமல் போயிருப்பதாகவும் அவர் குறிப்பி;ட்டார்.
மீள்கட்டமைப்பு வேலைத்திட்டத்தின் ஊடாக நிறுவனங்களில் புதியதொரு பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் என்றும் அரசாங்கம் இதனைப் பயன்படுத்தி அரச நிறுவனங்களை விற்பனை செய்வதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
