Home » வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பின் மீதான விவாதம் இன்று இடம்பெறுகிறது

வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பின் மீதான விவாதம் இன்று இடம்பெறுகிறது

Source
Share Button

2023 வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதம் பாராளுமன்றத்தில் இன்று ஆரம்பமானது. எதிர்க்கட்சி முன்வைத்த யோசனைகள் மீது ஜனாதிபதி வரவு செலவுத்திட்டத்தி;ல் கவனம் செலுத்தியுள்ளமை பாராட்டத்தக்கதாகும் என்று விவாதத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். திறந்த பொருளாதாரம் பற்றிய பல்வேறு வியடங்களை ஜனாதிபதி இதில் உள்ளடக்கியிருப்பதாகவும் அவர் கூறினார். செலவு முகாமைத்துவம் பற்றி அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகும். சமூகப் பாதுகாப்பு, சமூக நீதி என்பன பற்றியும் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அரசாங்கம் முன்மாதியாக செயற்படுமாயின், மக்களுக்கும், தமது குழுவினரும் நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவார்கள் என கலாநிதி ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தினார்.

வரவு செலவுத்திட்ட வரலாற்றில் சவால்களுக்கு மத்தியில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்த்pட்டம் இதுவாகும் என்று விவாதத்தில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பளாபிட்டிய தெரிவித்தார். நெருக்கடியான சந்தர்ப்பத்தில் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான பொறுப்பை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி வரவு செலவுத்திட்டத்தின் மூலமும் தனது பொறுப்புவாய்ந்த தன்மையை உறுதிப்படுத்தியுள்ளதாக அவர் கூறினார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image