வருமான வரி அறிக்கையை சமர்ப்பிக்க முடியாமல் போனவர்களுக்கு மேலதிகமாக ஒருவார கால சலுகைக்காலம்

வருமான வரி அறிக்கையை சமர்ப்பிக்க முடியாமல் போனவர்களுக்கு மேலதிகமாக ஒருவார கால சலுகைக்காலம் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக எதுவித தண்டப்பணமும் அறவிடப்பட மாட்டாது. அரச கணக்கீட்டு நிறைவேற்றுக் குழுவில் வெளியான விடயங்கள் தொடர்பில் விரைவில் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய உள்நாட்டு வருமான வரி ஆணையாளர் நாயகத்திற்கு பணிப்புரை வழங்கியுள்ளார். நிலுவை வரி மற்றும் தண்ட வரிப்பணமாக 773 பில்லியன் ரூபாவை அறவிடாமை, 200 பில்லியன் ரூபா பெறுமதியான காசோலைகள் வலிதற்றவையாகியமை ஆகிய சிக்கல்கள் அங்கு முன்வைக்கப்பட்டன. குறிப்பிட்ட 773 பில்லியன் ரூபாவில் 201 பில்லியன் ரூபாவை எதுவித சட்ட சிக்கலும் இன்றி அறவிட்டுக்கொள்ள முடியும் என கணக்காய்வாளர் நாயகம் தெரிவித்துள்ளார். வரிப்பணம் அறவிடாமை குறித்து கண்டறியப்பட வேண்டும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
