வர்த்தகம் மற்றும் விற்பனை ரீதியான ஒழுங்குறுத்தல் சம்மந்தமாக நுகர்வோர் அதிகார சபை விசேட வர்த்தமானியை வெளியிட்டுள்;ளது. நுகர்வோரின் முறைப்பாடுகளை கவனத்தில் கொண்டு இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அதிகார சபையின் தலைவர் சாந்த நிரியல்ல தெரிவித்துள்ளார். சூரிய சக்தி மின்கட்டமைப்பு, தொலைபேசி மற்றும் உதிரிப்பாகங்கள், தளபாடங்கள், காலணிகள், சமயலறை உபகரணங்கள், சுதத்pகரிப்புப்பொருட்கள், படுக்கை விரிப்புகள், மெத்தைகள், தைக்கப்ட்ட ஆடைகள் உள்ளிட்ட பொருட்களைவ விற்பனை செய்யும் நேரடி வர்தத்கர்கள் அதிகார சபையில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டிருக்கும் வர்த்தகர்கள் பொருத்தமற்ற பொருட்களை விற்பனை செய்யும் பட்சத்தில் அவர்களுக்கெதிராக சட்ட நடவக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அதிகார சபை தெரிவித்திருக்கிறது. இது பற்றி அதிகார சபை புறக்கோட்டை மற்றும் அதனை சூழவுள்ள பிரதேசங்களில் விசேட சுற்றிவளைப்புகளை முன்னெடுக்கும்.
நேரடி வர்த்தகர்கள் என்ற வறையறைக்குள் நடமாடும் விற்பனையாளர்கள் உள்ளடங்குகின்றார்கள். இதன்படி நேரடி வர்த்தகர்ள் தமது வணிகப்பெயர், பதிவ இலக்கம் ஆகியவற்றை சமர்ப்பித்து நுகர்வோர் அதிகார சபையில் தம்மை வர்த்தகராக வர்த்தகராக பதிவு செய்து கொள்ள வேண்டும்.