வளமான தேசத்தை கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறு இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து பிரித்தானியாவில் வாழும் மக்களிடம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு

நாட்டில் நிலவும் நெருக்கடிகளை வெற்றி கொண்டு வளமான தேசத்தை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்; என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து பிரித்தானியாவில் வாழும் மக்களுடன் நடைபெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி இதைனைக் கூறினார். புலம் பெயர்வாழ் மக்களின் அலுவலக செயற்திட்டங்கள் உடபட இலங்கையில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் புதிய முதலீட்டு வாய்புகளில் இணைந்து கொள்ளமாறும் ஜனாதிபதி அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
பொதுநலவாய அமைப்பை பலப்படுத்திக்கொண்டு முன்னோக்கிச் செல்வது அவசியமாகும். நாடு என்ற ரீதியில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும.; இதற்காக சர்வதேச நாணய நிதியத்தடன் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நிதியத்துடன் தற்போதைக்கு ஆரம்பகட்ட உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருப்பதாக ஜனாதிபதி கூறினார்.
இதேவேளை, மறைந்த இரண்டாவது எலிசபெத் மகாராணியின் இறுதிக்கிரியையில் பங்கேற்பதற்காக லண்டனுக்குச் சென்ற உலகத் தலைவர்களுக்கும் மூன்றாவது சாள்ஸ் மன்னருக்கும் இடையிலான சந்திப்பு பெகிங்ஹாம் அரண்மனையில் நடைபெற்றது. இதன்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மூன்றாவது சாள்ஸ் மன்னருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஜனாதிபதியின் பாரியாரான சிரேஷ்ட பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவும் இந்த சந்தர்ப்பத்தில் இணைந்து கொண்டார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பற்றிசியாவையும் இன்று சந்தித்து பேச்சவார்த்தை நடத்தினார்.
