அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் வாடிக்கையாளர்களுக்கு சிரமங்களை ஏற்படுத்தாத வண்ணம் வங்கி நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வது பற்றி கவனம் செலுத்தப்படடுள்ளது. ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரட்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரின் தலைமையில் வங்கி துறை முக்கியஸ்தர்களுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இதுபற்றி கவனம் செலுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு இன்று உயர்ந்தபட்ச சேவைகளை வழங்க திட்டமிட்டுள்ளதாக துறைசார் அதிகாரிகள் இதன்போது உறுதியளித்தார்கள். வாடிக்கையாளர்களுக்கு உயர்ந்த பட்ச சேவையை வழங்க தயார் நிலையில் உள்ளதாக மக்கள் வங்கி, இலங்கை வங்கி என்பனவற்றின் தலைவர்கள் இதன் போது உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.