வாழைச்சேனை கடதாசி ஆலையின் உற்பத்திப் பணிகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றன

வாழைச்சேனை கடதாசி ஆலையில் உற்பத்தி பணிகள் தற்போது வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாக ஆலையின் தலைவர் விமல் ரூபசிங்க தெரிவித்துள்ளார். லொத்தர் சபைக்கு தேவையான கடதாசிகளை வழங்குவதற்காக அச்சக கூட்டுத்தாபனத்துடன் தற்போது உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டுள்ளது.இங்கு உற்பத்தி செய்யப்படும் கடதாசி பாடப் புத்தகங்களை அச்சியுவதற்கும் எதிர்காலத்தில் பயன்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
