Home » விணைத்திறன் அற்ற செயற்பாடுகளுக்கான கடன்கள் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு காரணம்

விணைத்திறன் அற்ற செயற்பாடுகளுக்கான கடன்கள் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு காரணம்

Source
Share Button

2023ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் முதலாவது நாள் விவாதம் இன்றாகும். விணைத்திறன் அற்ற செயற்பாடுகளுக்காக பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்கள் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கான காரணமாகும் என விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் விஜயதாஷ ராயபக்ஷ தெரிவித்தார். அரச நிறுவனங்களில் இடம்பெறும் மோசடிகளை தடுப்பதற்காக டிஜிட்டல் முறைமையை அறிமுகம் செய்வது அவசியமாகும். மோசடிக்கார வர்த்தகர்களிடமிருந்து அரசியல் கட்சிகளை பாதுகாப்பது கட்சித் தலைவர்களின் பொறுப்பாகும் என்று அவர் கூறினார்.

வரி அறிமுகத்தின் மூலம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று விவாதத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜித கேரத் தெரிவித்தார். நட்டத்தை எதிர்நோக்கும் நிறுவனங்களை மறு சீரமைத்து அவற்றை லாபம் ஈட்டும் நிறுவனங்களாக மாற்றுவது அவசியம் என்று விவாதத்தில் கலந்து கொண்ட அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவித்தார். உலக நாடுகளுக்கு, கடன் படாத வகையில் செயற்படுவது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

நாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கு எதிர்க் கட்சியின் ஒத்துழைப்பு அவசியம் என்று விவாதத்தில் கலந்து கொண்ட அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார். வரவுசெலவுத் திட்டத்துக்கு எதிர் கட்சியின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image