கனடா செல்வதற்காக சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்டு வியட்நாமில் மீட்கப்பட்ட இலங்கையர்களில் 85 பேர் நாடு திரும்ப ஒப்புக்கொண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.
இலங்கையில் இருந்து கடல்வழியாக கனடா செல்வதற்காக சட்டவிரோதமாக படகு மூலம் அழைத்துச் செல்லப்பட்ட சமயம் படகில் ஏற்றப்பட்ட கோளாறு காரணமாக வியட்நாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள 303 இலங்கையர்களில் 85 பேர் நாடு திரும்ப இணங்கியுள்ளதாகவும் அவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு இலங்கை அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக நேற்று (28) பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.
303 ஏ இலங்கையர்கள் மீட்கப்பட்டு வியட்நாம் முகாம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் sanitizer அருந்தியுள்ளதால் ஒருவர் உயிரிழந்ததாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
TL