விளக்கமறியலில் வைப்பதற்குப் பதிலாக சந்தேக நபர்களை வீட்டுக்காவலில் தடுத்து வைப்பது பற்றி புதிய சட்டம்

விளக்கமறியலில் வைப்பதற்குப் பதிலாக சந்தேக நபர்களை வீட்டுக் காவலில் தடுத்து வைப்பது பற்றிய புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும் என ராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்துள்ளார். சிறைச்சாலைகளில் தற்போது நிலவும் நெருக்கடியினை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. போதைப்பொருள் குற்றங்கள் சம்பந்தப்பட்டு, சிறைவாசம் அனுபவிக்கும் கைதிகளுக்கு மேலதிக சிகிச்சை வழங்குவது பற்றியும் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
