விழிப்புலன் இழந்தவர்களுக்கு உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்கு மற்றுமொருவரின் உதவியை பெற்றுக்கொள்ளும் வகையில் சட்ட ஏற்பாடுகள் திருத்தப்படவுள்ளன. வாக்களிப்பவர்க்கு உதவியாக செல்பவர் 18 வயதை தாண்டியவராக இருப்பது அவசியமாகும். வாக்குச் சாவடிக்கு செல்லும் உதவியாளர் வேட்பாளராக இருக்கக்கூடாது. அரசியல் கட்சியால் அதிகாரம் வழங்கப்பட்டவர்க்கும், வாக்குச்சாவடி பிரதிநிதியாக நியமிக்கப்பட்டவர்க்கும் உதவியாளராக செல்ல முடியாது. இதற்கான சான்றிதழை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பப்படிவத்தை கிராம உத்தியோகத்தரிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பப் படிவத்தை தேர்தல் ஆணைக்குழுவின் இணையத் தளத்திலிருந்தும் தரவிறக்கம்; செய்துகொள்ளவும் முடியும். பூர்த்தி செய்யப்பட் விண்ணப்பத்தை கிராம உத்தியோகத்தரிடம் உறுதிப்படுத்துவது அவசியமாகும். பின்னர் அதனை அரசாங்க வைத்தியர் ஒருவர் அத்தாட்சிப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.