விவசாயத்துறையை புத்துயிரூட்டுவதற்கான யோசனைகள் அடங்கிய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது

விவசாயத் திணைக்களம் தயாரித்துள்ள இலங்கையின் விவசாயத்துறையை புத்துயிரூட்டுவது தொடர்பான அறிக்கை அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இரசாயன உர இறக்குமதி, இரசாயன உரத்தை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் பயிர்ச் செய்கை, சேதனப் பசளையை மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் விவசாயம் உட்பட பல்வேறு துறைகள் தொடர்பான கருத்துக்களும், யோசனைகளும் இதில் இடம்பெற்றுள்ளதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.
