Home » விவசாயத் திணைக்களத்தினால் உணவுப் பாதுகாப்பு வேலைத்திட்டம்

விவசாயத் திணைக்களத்தினால் உணவுப் பாதுகாப்பு வேலைத்திட்டம்

Source
Share Button

உணவுகளுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சம் நிலவுகின்ற இந்த சந்தர்ப்பத்தில், விவசாயத் திணைக்கள அதிகாரிகளுடன் இணைந்து உணவுப் பாதுகாப்பு வேலைத்திட்டத்தை தயாரித்துக் கொண்டிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் விவசாய அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி விமலேந்திரன் ஷரண் மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் பிரதிநிதியான மாலின் ஹேர்விக் ஆகியோருடன் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே பிரதமர் இதனைக் கூறினார்.

இலங்கையின் விவசாயத்துறை எதிர்கொண்டிருக்கும் பிரதான பிரச்சினை உரம் மற்றும் எரிபொருளுக்கான தட்டுப்பாடே என பிரதமர் இதன் போது சுட்டிக்காட்டினார். இதற்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளும் பட்சத்தில் சுமார் ஆறு மாத காலப்பகுதியில் குறித்த பிரச்சினையை கட்டுப்படுத்த முடியும் என்று பிரதமர் ரணி;ல் விக்ரமசிங்க இதன்போது குறிப்பிட்டார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word
Anti-Spam Image