Home » விவசாய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஒன்றை அமைப்பதற்காக அமெரிக்காவின் கலிபோனிய பல்கலைக்கழகத்தின் ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ளப்படவுள்ளது

விவசாய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஒன்றை அமைப்பதற்காக அமெரிக்காவின் கலிபோனிய பல்கலைக்கழகத்தின் ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ளப்படவுள்ளது

Source
Share Button

இலங்கையின் விவசாயத்துறையை நவீனமயப்படுத்தவும், புதிய விவசாய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஒன்றை அமைப்பதற்காகவும் கலிபோனிய பல்கலைக்கழகத்துடன் அரசாங்கம் இணைந்து பணியாற்றி வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அமெரிக்க – இலங்கை குரடடிசiபாவ ஆணைக்குழுவின் 70ஆவது நிறைவாண்டு பூர்த்தி விழாவில் அதிதியாக கலந்து கொண்டு அவர் உரையாற்றினார். உணவு விநியோகத்திற்கு அவசியமான வளங்கள் அற்ற நாடுகளுக்கும், மத்திய கிழக்குப் பிராந்தியத்திற்கும் இதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது பற்றி சிங்கப்பூர் முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான காணிகளை அடையாளம் காணுமாறு தாம் பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார். புதிதாக அமைக்கப்படவுள்ள விவசாய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை தேயிலை ஆராய்ச்சி நிலையத்துடன் இணைத்து நாட்டின் விவசாயத் துறையை மேம்படுத்துவதற்கான வழிகள் பற்றியும் ஆராயப்படவிருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image