Home » விவசாய வங்கிகள் ஊடாக எதிர்வரும் பெரும்போகத்திற்கான கடன்களை வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்         

விவசாய வங்கிகள் ஊடாக எதிர்வரும் பெரும்போகத்திற்கான கடன்களை வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்         

Source
Share Button

எதிர்வரும் பெரும்போகத்திற்காக, விவசாய வங்களின் ஊடாக விவசாயிகளுக்கு கடன்வழங்கும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. இந்த வேலைத்திட்டம் நெடோல்பிட்டிய விவசாய அபிவிருத்தி நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இம்முறை பெரும்போகத்தில் மூன்று லட்சத்து 14 ஆயிரத்து 673 ஹெக்டெயர் வயல் காணியில் செய்கை பண்ண திட்டமிடப்பட்டுள்ளது. 2022ஃ2023 பெரும்போக செய்கைக்கான கடன் வழங்கும் வகையில், இந்தக் கடன் அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் வழங்கப்பட்டது. அதன்படி, அங்குள்ள 11 விவசாயிகளுக்கு தலா 50 ஆயிரம் ரூபா கடன் வழங்கப்பட்டது. 

பெரும்போக செய்கைக்கான கடன், விவசாய வங்கியின் கடன் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. இந்த வருடத்தில் இதுவரை ஏழாயிரத்து 124 மில்லியன் ரூபா கடன் விவசாய வங்கிகளின் ஊடாக வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இரண்டு லட்சத்து ஐயாயிரம் விவசாயிகளுக்கு இந்தக் கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த வருடம் ஆகஸ்ட் மாதத்திற்குள் ஒரு லட்சத்து 54 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள், ஐயாயிரத்து 472 மில்லியன் ரூபா கடனை திருப்பிச் செலுத்தியுள்ளனர். 49 ஆயிரத்து 385 விவசாயிகள் இதுவரை ஆயிரத்து 576 மில்லியன் ரூபாவை திருப்பிச் செலுத்தவில்லை. 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தீர்மானத்தின்படி, அரச வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனில் 688 மில்லியன் ரூபா தள்ளுபடி செய்யத் தீர்மானிக்கப்பட்டது. இவ்வாறு தள்ளுபடி செய்யப்பட்ட விவசாயக் கடன்களை இரண்டு வருடங்களில் திறைசேரியின் ஊடாக உரிய வங்கிகளுக்கு வழங்க வேண்டும். இந்த யோசனைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் 350 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டு அல்லது அதற்கும் குறைவான ஹெக்டெயர் நிலப்பரப்பில் நெற்செய்கைக்காக கடன் பெற்ற 28 ஆயிரத்து 259 விவசாயிகளுக்கு இந்த நிவாரணம் கிடைக்குமென அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image