வெசக் உற்சவத்தையிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது. பக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது இதன் நோக்கமாகும். குறித்த காலப்பகுதியில் வீதி ஒழுங்குகள் முறையாக கடைப்பிடிக்கப்படும். மது போதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொழும்பில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் முன்னெடுக்கப்படும். கொழும்பு மாநகரை மையமாகக்கொண்டு வெசக் வலயங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன்; பல்வேறு நிகழ்வுகளும் ஒழுங்கு செய்யப்படடுள்ளன. இதன்; காரணமாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பொலிஸ தலைமையகம் அறிவித்துள்ளது. கங்காராம பௌத்த வெசக் வலயம் மற்றும் பௌத்தாலோக வெசக் வலயங்களுக்கு வருகை தரும் பக்தர்களின் நலன் கருதி வாகன தரிப்பிட வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வெசக் மற்றும் பொசன் காலப்பகுதியில்; மக்களை போதைப்பொருள் பாவனையிலிருந்து பாதுகாப்பதற்கு விசேட வேலைத்திட்டத்தை அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை ஆரம்பித்துள்ளது. இது நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும். விகாரைகள், அறநெறிப்பாடசாலைகள் மற்றும் நலன்புரி அமைப்புகள் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும்.