கதிரவன் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு மற்றும் போரதீவுப்பற்று பிரதேச செயலகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழா 2022 வெல்லாவெளி கலாசார மண்டபத்தில் கதிரவன் மாற்றுதிறனாளிகள் அமைப்பின் தலைவர் மா.சுதாகரன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் சு.ராகுலநாயகி, உதவி பிரதேச செயலாளர் வி.துலாஞ்சனன், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் யு.தனேந்திரராசா போராதீவுப்பற்று பிரதேச சபை உறுப்பினர் சுஜிகரன், போரதீவுப்பற்று முதியோர் சம்மேளன செயலாளர் த.ஜெகநாதன் அவர்களுடன் சமூக சேவைகள் உத்தியோகத்தர் யு.சபேசன் மாற்றுத்திறனாளிகள் அமைப்புக்கு பொறுப்பான அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.கஜந்தி, மாற்றுத்திறனாளிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில் விசேட தேவையுடையவர்களின் கண்கவர் கலைநிகழ்வுகள் பல இடம்பெற்றதுடன் விசேடமாக 2021 சுயசக்தி அபிமானி நிகழ்ச்சித்திட்டம், தடகள, பராஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் மாவட்ட மட்டத்தில் வெற்;றிபெற்றவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், 2022 ஆம் ஆண்டிற்கான இலங்கை தேசிய பார்வையற்றோர் 20 க்கு 20 உலக கிண்ண கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு குறிப்பாக போரதீவுப்பற்று பிரதேசத்திற்கு பெருமை சேர்த்துத்தந்த வி.யோகராஜா அவர்களும் அதிதிகளால் கௌரவிக்கப்பட்டு நினைவு சின்னங்களும் பரிசு பொருட்களும் வழங்கிவைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
AR