Home » வெளிநாட்டுக் கடவுச் சீட்டுக்களை விநியோகிக்கும் ஒருநாள் சேவை இன்றில் இருந்து மேலும் மூன்று மாவட்டங்களில்

வெளிநாட்டுக் கடவுச் சீட்டுக்களை விநியோகிக்கும் ஒருநாள் சேவை இன்றில் இருந்து மேலும் மூன்று மாவட்டங்களில்

Source
Share Button

.

கடவுச்சீட்டுக்களை விநியோகிக்கும் ஒருநாள் சேவை மூன்று மாவட்டங்களில் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. வவுனியா, கண்டி, மாத்தறை ஆகிய பிரதேசங்களில், இந்த ஒருநாள் சேவை மூலம் கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

முதற்கட்டமாக ஏற்கனவே முன்பதிவு செய்து கொண்ட 100 பேர் கடவுச்சீட்டுக்களை  பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பங்களை ஒப்படைப்பதற்கான தினத்தை இணையத் தளத்தின் ஊடாக பதிவு செய்து கொள்ள முடியும். றறற.ஐஅஅபைசயவழைn.பழஎ.டம என்பதே அந்த இணையத் தள முகவரியாகும்.

இதேவேளை, குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் தலைமைக் காரியாலயத்தில் ஒருநாள் சேவையின் கீழ் கடவுச் சீட்டுக்களைப் பெறுவதற்கு விண்ணப்பங்களைப் பொறுப்பேற்பதற்குமான நடவடிக்கை எதிர்வரும் 60 நாட்களுக்கு பூர்த்தியாகியுள்ளது. ஆகையினால், வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக விரைவில் பயணமாகவுள்ளவர்கள் அதனை உறுதிப்படுத்தும் ஆவணங்களுடன் வட்ஸ்அப் மூலம் தகவல் அனுப்பி, விண்ணப்பங்களை ஒப்படைப்பதற்கான தினத்தை ஒதுக்கிக்கொள்ள முடியும்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image