வெளிநாட்டு தொழிலாளர்களின் மூலம் கிடைக்கும் அந்நியச் செலாவணியில் அதிகரிப்பு

வெளிநாட்டு பணியாளர்கள் உரிய முறையில் இலங்கைக்கு அந்நியச் செலாவணியை அனுப்பும் நடைமுறை அதிகரித்துள்ளது. அதன்படி, ஒக்டோபா மாதத்துடன் ஒப்பிடுகையில், கடந்த நவம்பர் மாதத்தில் நாட்டிற்குக் கிடைத்துள்ள அந்நிய செலாவணி 29 மில்லியன் அமெரிக்க டொலர்களால் அதிகரித்துள்ளது. ஒக்;டோபர் மாதத்தில் கிடைக்கப் பெற்ற அந்நியச் செலாவணி மூவாயிரத்து 554 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும் இந்தத் தொகை கடந்த நவம்பர் மாதத்தில் மூவாயிரத்து 844 மில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த வருடம் நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 42 சதவீத அதிகரிப்பாகும்.
