Home » வேட்பாளரின் தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டமூல திருத்தங்கள் தொடர்பில் பஃவரல் கடிதம்

வேட்பாளரின் தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டமூல திருத்தங்கள் தொடர்பில் பஃவரல் கடிதம்

Source

வேட்பாளரின் தேர்தல் செலவினத்தின் மீதான ஒழுங்குபடுத்தல் சட்டமூலத்திற்கு திருத்தங்கள் தொடர்பில் நடைபெறும் குழுநிலை விவாதங்களில் சேர்த்துக் கொள்ள வேண்டிய 13 வடயங்கள் அடங்கிய கடிதம் ஒன்றை பஃவரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி நீதி அமைச்சருக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.

பஃவரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அனுப்பி வைத்துள்ள அக் கடிதத்தில்,

பஃவரல் அமைப்பு உள்ளிட்ட கண்காணிப்பு அமைப்புக்கள், தேர்தல் ஆணைக்குழு, அரசியல் கட்சிகள் மற்றும் தேர்தலில் சமதளத்தை எதிர்பார்க்கின்ற அனைவரதும் பாராட்டுக்களைப் பெற்றுக் கொண்டு தேர்தலில் வேட்பாளர் செலவினத்தை மட்டுப்படுத்துவதற்கான சட்டமூலம் கொண்டுவரப்பட்டமை தொடர்பாக எமது கௌரவ ஜனாதிபதி அவர்களுக்கும், கௌரவ பிரதமர் அவர்களுக்கும், கௌரவ நீதி அமைச்சருக்கும் எமது மதிப்பு உரித்தாகும். ஆனாலும் நாங்கள் 2016 ஆம் ஆண்டில் தயாரித்துள்ள அடிப்படை சட்டமூலத்தில் காணப்பட்ட அவசியமான முக்கிய விடயங்கள் சில குறித்த சட்டமூலத்தில் கைவிடப்பட்டுள்ளமையால், மீண்டும் அவ்விடயங்களை குழுநிலை விவாதங்களில் சேர்த்துக் கொள்ளுமாறு தயவுடன் வேண்டிக்கொள்கின்றேன்.

தேர்தலில் போட்டியிடுகின்ற அனைத்து வேட்பாளரும் (குறைந்தபட்சம் பாராளுமன்ற, மாகாண சபை, ஜனாதிபதி தேர்தல்கள்) தேர்தல்களுக்கு வேறானதொரு வங்கிக்கணக்கு திறக்கப்படல் வேண்டியதுடன், அதனை பேணிச் செல்ல வேண்டுமெனவும், நியமனப்பத்திரத்தை சமர்ப்பித்து ஒருவார காலத்திற்குள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அதனை எழுத்துமூலம் தெரிவித்தல் வேண்டுமென்ற ஏற்பாடு உட்சேர்க்குமாறு முன்மொழிகின்றோம்.வேட்பாளர்கள் தமக்குக் கிடைக்கின்ற அனைத்து உதவுத் தொகைகளும் குறித்த வங்கிக்கணக்கில் வைப்பிலிடப்பட வேண்டியதுடன், அனைத்து செலவினமும் குறித்த வங்கிக்கணக்கு மூலமாக மாத்திரம் மேற்கொள்ளப்பட வேண்டுமென்ற ஏற்பாடு உட்சேர்க்குமாறு முன்மொழிகின்றோம்.அந்தந்த தேர்தல்களில் வேட்பாளர்கள் சார்பாக அல்லது கட்சி சார்பாக கட்சியானது ஏதேனும் செலவினத்தைக் கொண்டிருப்பின், அதற்காக கட்சியால் வேறானதொரு வங்கிக்கணக்கொன்று திறக்கப்பட வேண்டியதுடன், அனைத்து, உதவு தொகைகளும், நன்கொடைகளும் குறித்த கணக்கில் வைப்பிலிடப்பட வேண்டியதுடன், கட்சியின் செலவுகள் குறித்த கணக்கினூடாக மாத்திரம் மேற்கொள்ளப்பட வேண்டுமென்ற ஏற்பாடுகள் உட்சேர்க்குமாறு முன்மொழிகின்றோம்.

வேட்பாளர்களுக்கு மற்றும் அரசியல் கட்சிகளுக்கு வெவ்வேறான வங்கிக் கணக்குகள் இல்லாதுவிடின், செலவினங்களை மட்டுப்படுத்தல் அல்லது கண்காணிப்பு செய்தல் சிரமமாக அமைவதுடன், இச்சட்டத்தின் அடிப்படை நோக்கத்தை அடைவதற்கும் சிரமமாக அமையும்.

செலவினங்களின் விபரத்திரட்டுக்களை சோதனையிடுவதற்கு தேர்தல் ஆணைக்குழுவுக்கு அல்லது ஆணைக்குழுவால் அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரியொருவருக்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இடமளித்தல் வேண்டுமென்ற ஏற்பாடு உட்சேர்க்குமாறு முன்மொழிகின்றோம்.செலவினங்களின் விபரத்திரட்டுக்களை தேர்தல் ஆணைக்குழுவால் வழங்கப்படுகின்ற படிவத்திற்கு ஏற்புடைய வகையில் பேணிக்கொண்டு செல்ல வேண்டுமென்ற ஏற்பாடு உட்சேர்க்குமாறு முன்மொழிகின்றோம்.வேட்பாளர்களையும், அரசியல் கட்சிகளையும் வர்த்தகக் கம்பனிகள்; அல்லது வர்த்தகர்களின் பிடியிலிருந்து மீட்டெடுக்க வேண்டுமாயின் ஆளொருவருக்குஃகம்பனிக்கு வேட்பாளர் ஒருவரின் மொத்தச் செலவில் செலவிடக்கூடிய அளவு (உதாரணம் 10மூ) மட்டுப்படுத்தப்பட வேண்டுமென்ற ஏற்பாடு உட்சேர்க்குமாறு முன்மொழிகின்றோம்.பொருட்களாக உதவிகளை அல்லது நன்கொடைகளைப் பெற்றுக் கொள்ளும் போது குறித்த ஆண்டின் சந்தைப் பெறுமதிக்கமைய அது கணக்கு வைக்கப்படல் வேண்டுமென்ற ஏற்பாடு உட்சேர்க்குமாறு முன்மொழிகின்றோம்.வேட்பாளரொருவரின் அறிவுக்கெட்டாமல் பணம் செலவிடப்பட முடியாதென்ற ஏற்பாடு உட்சேர்க்கப்படல் வேண்டும். அதில் (ரூ.10,000) குறித்த தொகைக்கு மேற்பட்ட தொகை வேட்பாளரின் அறிவுக்கெட்டாமல் செலவிட முடியாதெனும் ஏற்பாடுகள் உட்சேர்க்கப்பட வேண்டுமென முன்மொழிகின்றோம். இல்லாவிடின், இதனை முறையற்ற வகையில் வேட்பாளர்கள் பயன்படுத்த இடமுண்டு.15ஆ உறுப்புரையின் கீழான, தொடர்பாடல் செயற்பாடுகளுக்கான செலவுகள் உட்சேர்க்கப்படல் வேண்டுமென இங்கு உறுப்புரையொன்;று சேர்க்கப்பட்டிருப்பதடன், அதில் தொடர்பாடல் என்பதை முறையான வகையில் பொருள்கோடல் வழங்குவது அவசியமாகும். இல்லாவிடின், அதனைப் பயன்படுத்தி தேர்தல் பிரச்சார செலவினங்களை உட்;சேர்க்காமல் கைவிடுவதற்கான ஆபத்துக்கள் உள்ளன.வெளிநாட்டு உதவிகள் கிடைக்கின்ற இலங்கை நிறுவனங்களிடமிருந்து வேட்பாளர்களின் அல்லது அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக நேரடி அல்லது மறைமுக நிதியைப் பெற்றுக்கொள்ள முடியதென சட்டமூலத்தின் 5 ஆம் உறுப்புரையில் ஏற்பாடு உட்சேர்க்குமாறு முன்மொழிகின்றோம்.தொண்டர் அமைப்புக்களைப் பதிவு செய்தல் மற்றும் ஒழுங்குபடுத்தல் தொடர்பான சட்டத்தின் கீழ், சங்கங்கள் கட்டளைச்சட்டத்தின் கீழ், கம்பெனிகள் சட்டத்தில் இலாபமீட்டாத கம்பனிகளாகப் பதிவு செய்யப்பட்ட அல்லது பாராளுமன்ற சட்டத்தின் மூலம் கூட்டிணைக்கப்பட்ட அமைப்புக்களிடமிருந்து தேர்தலில் வேட்பாளர்களின் பிரச்சாரத்திற்காக நிதியைப் பெற்றுக்கொள்ள முடியாதவாறு சட்டமூலத்தின் 5 ஆம் உறுப்புரைக்கு ஏற்பாடுகளை உட்சேர்த்தல்.தற்போது காணப்படுகின்ற ஏற்பாடுகளின் பிரகாரம் தேர்தல் குற்றமொன்று நிரூபிக்கப்பட்டால், ரூ.300- அபராதம் மற்றும் 3 வருடகால வாக்குரிமை மற்றும் தேர்தலில் போட்டியிடுவதற்கான உரிமை மாத்திரம் நீக்கப்படுகின்றமையால், இச்சட்டத்திற்கமைய குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட ஆளொருவருக்கு குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் குடியுரிமையை நீக்குதல் மற்றும் சிறைத்தண்டனை வழங்கல் போன்ற திட்டவட்டமான தண்டனைகளைப் போலவே குற்றப்பணத்தையும் நிச்சயிக்கக்கூடிய ஏற்பாடுகள் உட்சேர்க்குமாறு முன்மொழிகின்றோம்.தேர்தல் செலவுகள் பற்றிய செயன்முறையை கண்காணித்தல், மேற்பார்வை செய்தல் மற்றும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பாராளுமன்றத்தின் கீழ் ஏதேனுமொரு வகையான உத்தியோகபூர்வ கட்டமைப்பை தாபிப்பதற்கான ஏற்பாடுகளை உட்சேர்க்குமாறு என்று குறிப்பிடப்பட்டள்ளது.

AR

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image