Home » வேட்பாளர்கள் தொடர்பில் அரசியல் கட்சிகள் தமது கருத்துகளை வெளியிட்டுள்ளன

வேட்பாளர்கள் தொடர்பில் அரசியல் கட்சிகள் தமது கருத்துகளை வெளியிட்டுள்ளன

Source
Share Button

அடுத்த வருட இறுதிக்குள் நாட்டின் பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்படும் என பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

2024ஆம் ஆண்டுக்குள் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நாட்டின் பொருளாதாரம் பின்னோக்கிச் சென்றுள்ளதாகவும் அதனை அடித்தளத்தில் இருந்து கட்டியெழுப்ப வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்க்கட்சிக்கும் ஆளும் கட்சிக்கும் இடையில் கட்டியெழுப்பப்பட்ட விடயம் சித்தாந்தத்தை விட ஒருமித்த கருத்து என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும இன்று ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் இதில் கலந்துகொண்டார்.

இதனிடையே, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களின் கருத்துக்களை ஏற்று ஒருமித்த நாளை உணர்வோம் என பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழபெருமா தெரிவித்துள்ளார். அதற்கு எதிர்கட்சி தலைவரும் ஒன்றிணைந்துள்ளதாக இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் டளஸ் அழகப்பெரும குறிப்பிட்டார்.

மக்களுக்கான ஜனநாயக உரிமையை வென்றெடுப்பதற்கு 19வது அரசியலமைப்புத் திருத்தத்தை மீண்டும் அமுல்படுத்துவத்தி, நாட்டினை பொருளாதார, சமூக, கலாசார ரீதியில் முன்னோக்கி கொண்டு செல்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படும் நோக்கிலேயே ஜனாதிபதி வேட்பாளர் தெரிவில் இருந்து விலக தீர்மானித்தாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது தெரிவித்தார்.

மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் நாளை பாராளுமன்றத்தில் ஜனாதிபதி தேர்தலில் பங்குபற்றவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தலில் இருந்து தாம் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என்றும், இடைக்கால அரசாங்கம் அமையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் ஆட்சியாளர்களால் வேண்டுமென்றே நசுக்கப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளும் இடைக்கால அரங்கத்தின் மூலம் விரைவாகத் தீர்க்கப்படும் என அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் உள்ள அனைவரும் மக்களின் குரலுக்கு செவிசாய்க்க வேண்டும் என அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீர்ஸ் தெரிவித்துள்ளார்.

இன்றைய பாராளுமன்ற அமர்வின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நாளைய ஜனாதிபதித் தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கு தமது குழு வாக்களிக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உள்ளிட்ட 10 கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சந்தர்ப்பத்தில் தம்முடன் இணைந்து கொள்ளுமாறு ஜே.வி.பி தலைவருக்கும் விமல் வீரவன்ச கேரிக்கை விடுத்தார்.

எந்த வேட்பாளருக்கு வாக்களிப்பது என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று மாலை கூடி தீர்மானிக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தனின் இல்லத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதில், பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு வாக்களிக்க ஸ்ரீலங்கா பொதுஜன இளைஞர் அமைப்பு தீர்மானித்துள்ளது.

அதன் மத்திய குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் டி.வீ ஷானக்க தெரிவித்துள்ளார்.

கட்சியின் தீர்மானத்துடன் தாம் இருப்பதாக அவர் கூறினார்.

அனைத்து வேட்பாளர்களின் தொலைநோக்குப் பார்வையும், திட்டமும் ஆராயப்பட்டு, வாக்களிப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நாட்டின் பிரச்சனைகளை உணர்ந்து வாக்களிப்பேன் என்றும் அவர் கூறினார்.

சட்டரீதியாகவும் அரசியலமைப்பு ரீதியாகவும் தீர்மானம் எடுக்கப்படும் போது அது முறையாகவும் தெளிவாகவும் எடுக்கப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் ஷரித ஹேரத் தெரிவித்துள்ளார்.

நாட்டுக்கான புதிய வேலைத்திட்டத்தை முன்வைக்கும் தார்மீக அரசியல் கலாசாரம் உருவாக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

இந்த சந்தர்ப்பத்தில் உண்மையான கூட்டணி அரசாங்கத்துக்காக முன்னிற்பதாக பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image