வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை தொடர்பான திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது

வைத்தியர்கள் கட்டாய ஓய்வுபெறும் வயதெல்லையை திருத்தும் வகையிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அரசாங்க வைத்தியர்கள், பல் வைத்தியர்கள், அரசாங்கத்தில் பதிவு செய்து கொண்ட வைத்தியர்கள் ஆகிய பதவிகளில் உள்ளவர்கள் 63 வயதை பூர்த்தி செய்திருந்தால், டிசெம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் ஓய்வுபெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 62 வயதை பூர்த்தி செய்த வைத்தியர்கள் 63 வயதில் ஓய்வுபெறுவது அவசியமாகும். 61 வயதை பூர்த்தி செய்தவர்கள் 62ஆவது வயதில் ஓய்வு பெற வேண்டும். 60 வயதை பூர்த்தி செய்தவர்கள் 61 வயதில் ஓய்வுபெறுவது கட்டாயமானதாகும். 59 வயதுடைய வைத்தியர்கள் 60 வயதில் ஓய்வுபெற வேண்டும் என்று அரச நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
