ஸபோரிஸியா அணு சக்தி வளாகத்தில் ஆய்வு நடத்தவதற்கு ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுமதி

ஸபோரிஸியா அணு சக்தி வளாகத்தில் ஆய்வு நடத்தவதற்கு ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுமதி வழங்கப்படும் என்று ரஷியா அறிவித்துள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புட்டினுக்கம் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவெல் மெக்ரோனுக்கமிடையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையின் போதே ரஷ்ய ஜனாதிபதி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். தொலைபேசி உரையாடலாக இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஸபோரிஸியா அணு சக்தி வளாகத்தில் ராணுவ நடவடிக்கைகள் முடிவுக்கு கொண்டு வரப்படவேண்டும்; என்றும் வளாகத்தை ஆய்வுக்கு உட்படுத்த ரஷியா அனுமதி அளிக்க வெணடும் என்றம் ஐ.நா. செயலாளர் நாயகம் அண்;மையில் கேட்டுக்கொண்டிருந்தார்.
