Home » ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து தாம் நீக்கப்பட்டதாக இதுவரை அறிவிக்கப்படவில்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து தாம் நீக்கப்பட்டதாக இதுவரை அறிவிக்கப்படவில்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு

Source
Share Button

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து தாம் நீக்கப்பட்டதாக இதுவரையில் அறிவிக்கப்படவில்லை என அக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

தாம் அங்கம் வகிக்கும் குழு உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்கள் எனவும் வேறு எந்தக் கட்சியிலும் இணையும் எண்ணம் தமக்கு இல்லை எனவும் அமைச்சர் குறிப்பிடுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்தும் செயற்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். சர்வகட்சி அரசாங்கத்தின் தேவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் முன்வைக்கப்பட்டது. தாம் உள்ளிட்டவர்கள் அரசாங்கத்துடன் இணைந்துள்ளதாகவும், நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து அதனை மீட்பதற்கு ஒத்துழைப்பதே இதன் நோக்கமாகும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். இதனை விமர்சிப்பதற்கு பொருத்தமான தருணம் இதுவல்ல எனவும் இந்தத் தருணத்தில் அனைவரும் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image