ஹபரன பிரதேசத்தை மையமாகக் கொண்டு சுற்றுலா ஊக்குவிப்பு வேலைத்திட்டம்

உலக சுற்றுலாத்தினம் எதிர்வரும் 27ஆம் திகதி கொண்டாடப்படவிருக்கிறது. இம்முறை ஹபரன பிரதேசத்தை மையமாகக் கொண்டு சுற்றுலாத் தினம் கொண்டாடப்படவிருக்கிறது. சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் நோக்கோடு ஊடகங்களுக்கு விளக்கம் அளிக்கும் நோக்கோடு அரசாங்கத் தகவல் திணைக்களம் விசேட சுற்றுலாவொன்றை ஹபரன பிரதேசத்தில் ஒழுங்கு செய்திருக்கிறது. சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த தளகங்களை மக்களுக்கு அறிமுகப்படுத்துவதும், சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ளவர்களை வலுவூட்டுவதும் இதன் நோக்கங்களாகும்.
