Home » அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் முட்டைகளை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் மற்றும் உற்பத்தியாளர்களைக் கண்டறிய நடவடிக்கைகள்

அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் முட்டைகளை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் மற்றும் உற்பத்தியாளர்களைக் கண்டறிய நடவடிக்கைகள்

Source
Share Button

அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் முட்டைகளை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் மற்றும் உற்பத்தியாளர்களைக் கண்டறிய நாடளாவிய ரீதியில் சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
அவ்வாறான வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகார சபையின் தலைவர் சாந்த நிரியல்ல குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளை முட்டையொன்று அதிகபட்ச சில்லறை விலையாக 44 ரூபாவிற்கும், சிவப்பு முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 46 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட வேண்டுமென நுகர்வோர் அதிகாரசபை வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
அதன்படி, இந்த அதிகபட்ச சில்லறை விலைக்கு உட்பட்டு முட்டைகளை விற்பனை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Share Button
What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image