Home » கனடா அரசு இலங்கை தலைவர்கள் தொடர்பில் தடை உத்தரவு

கனடா அரசு இலங்கை தலைவர்கள் தொடர்பில் தடை உத்தரவு

Source

போர்க் குற்றவாளிகளான மகிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோருக்கு  எதிரான கனேடிய தடைகள் குறித்து கனடா பாராளுமன்ற உறுப்பினர்   ஹரி ஆனந்தசங்கரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

“பொறுப்புக்கூறலை நோக்கிய இந்த நீண்டதும் , வேதனையானதும் மற்றும் முக்கியமான பயணத்தில் உயிர் பிழைத்தவர்களுடன் தொடர்ந்து அணிவகுத்துச் செல்வதற்கான எனது உறுதிப்பாட்டை நான் என்றும் கடைப்பிடிப்பேன் என்றும் . முடிவில் நீதி வெல்லும் என்று நான் எப்போதும் நம்பிய வண்ணம் உள்ளேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன்”.

இவ்வாறு கனடா பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி  தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

போர்க் குற்றவாளிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான கனேடிய தடைகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரியின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

இலங்கையில் ஆயுதப் போர் முடிவுக்கு வந்து ஏறக்குறைய பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, 2009 ஆம் ஆண்டு ஜனாதிபதியாகவும் பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்த மகிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது சகோதரர் கோட்டாபாய ராஜபக்ச மீது  கனடிய அரசாங்கம்  விசேட பொருளாதார நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ் தடைகளை விதித்துள்ளது. , அதே காலகட்டத்தில் பாதுகாப்புச் செயலாளராக இருந்தவர் கோட்டாபய ராஜபக்ச என்பது குறிப்பிடத்தக்கது

ராஜபக்ச சகோதரர்களுக்கு மேலதிகமாக, இன்று விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளில் இலங்கை இராணுவப் பணியாளர் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க மற்றும் கடற்படை உளவுத்துறை அதிகாரி லெப்டினன்ட் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி ஆகியோர் அடங்குவர் என்பதும் கவனிக்கத்தக்கது

இன்று இலங்கை தொடர்பான சர்வதேச பொறுப்புக்கூறலுக்கான ஆழமான வரலாற்றின் ஆரம்ப  நாளாகும், இது பல உயிர் பிழைத்தவர்களுக்கும், உயிரிழந்தவர்களுக்கும் மற்றும் தமிழ் மக்களுக்கும் நீதி வழங்கப்படுவதை உறுதிசெய்வதற்கு முன்னோக்கி நகர்வதற்கான பலத்தை அளிக்கிறது. இதுவரை, இரண்டு ராஜபக்ச சகோதரர்களும், இலங்கையில்  உள்ள தமிழ் மக்களுக்கு எதிராக அவர்கள் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பல சர்வதேச போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகளுக்கு எந்தப் பொறுப்பும் கூறாமல் தொடர்ச்சியாக மௌனமாக இருந்து வருகின்றனர்.

இந்த நேரத்தில் கனடிய வெளிவிவகார அமைச்சர் கௌரவ அவர்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மெலனி ஜோலி, பாராளுமன்ற சகாக்கள், பல அமைப்புகள், தனிநபர்கள், தமிழ் சமூகத்தின் உறுப்பினர்கள் மற்றும் மிக முக்கியமாக இன்று தடைகளை வாதிடவும் விதிக்கவும் கடுமையாக உழைத்தவர்கள் அனைவருக்கும் எனது நன்றி

“பொறுப்புக்கூறலை நோக்கிய இந்த நீண்டதும் , வேதனையானதும் மற்றும் முக்கியமான பயணத்தில் உயிர் பிழைத்தவர்களுடன் தொடர்ந்து அணிவகுத்துச் செல்வதற்கான எனது உறுதிப்பாட்டை நான் என்றும் கடைப்பிடிப்பேன் என்றும் . முடிவில் நீதி வெல்லும் என்று நான் எப்போதும் நம்பிய வண்ணம் உள்ளேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன்”.

இவ்வாறு நமது பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி அவர்கள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

TL

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image