Home » ஜனாதிபதியின் கருத்து ஜனநாயகத்தை கேலி செய்வதாகும் – முன்னாள் அமைச்சர் சோ. கணேசமூர்த்தி

ஜனாதிபதியின் கருத்து ஜனநாயகத்தை கேலி செய்வதாகும் – முன்னாள் அமைச்சர் சோ. கணேசமூர்த்தி

Source

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டிலே இல்லாத ஒரு தேர்தலுக்கு எப்படி பணம் வழங்குவது என்ற கருத்து ஜனநாயகத்தை கேலி செய்வதாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் சோ. கணேசமூர்த்தி தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடும் விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் சோ. கணேசமூர்த்தி இன்று (28) காலை 11.30 மணிக்கு கிழக்கு ஊடக மன்றத்தில் ஊடக சந்திப்பு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தார்.

இவ் ஊடக சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் தொகுதி பிரதம அமைப்பாளர் த. தயானந்தன், மட்டக்களப்பு மாநகர சபை வேட்பாளர்கள் இருவர் இணைந்து கொண்டிருந்தனர்.

சோ. கணேசமூர்த்தி உரை,
இலங்கை திருநாட்டின் ஜனநாயக வரலாற்றிலே மக்கள் ஒரு பெரிய ஜனநாயகத்திற்கான அச்சுறுத்தலை எதிர்நோக்க வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டு இருக்கின்றது. மக்களினுடைய இறையாண்மையை உறுதிப்படுத்துவது ஒரு நாட்டினுடைய ஜனநாயகம் எஞ்சியிருக்கின்ற என்பதை உறுதிப்படுத்துவது மக்களுடைய மக்கள் மூலம் தெரிவு செய்யப்படுகின்ற அமைப்புக்குள் சுதந்திரமாக இயங்குகின்றன என்பதை உறுதிப்படுத்துவது.

குறிப்பாக உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஒரு வருடத்துக்கு முன்பே தேர்தல் ஆணையத்தினால் அறிவிக்கப்பட்டு இந்த தேர்தல் நடவடிக்கைகள் அனைத்துக்கும் உரிய சட்டரீதியான நடவடிக்கைகளை சுயாதீன ஆணை குழுவான தேர்தல் ஆணைக்குழு மேற்கொண்டது அதன் அடிப்படையிலேயே அரசாங்கத்தினுடைய ஒப்புதலுடன் சட்டமா அதிபருடைய ஆலோசனை உடன் சகல நீதி முறையில் அமைந்த எல்லாவிதமான ஒப்புதல்களையும் பெற்றுதான் தேர்தல் ஆணையகம் இந்த தேர்தலை பிரகடனப்படுத்தியது.

இன்று இந்த நாட்டினுடைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டிலே ஒரு தேர்தல் இல்லை தேர்தல் ஒன்று இல்லை என்று சொல்லுகின்றார். இல்லாத ஒரு தேர்தலுக்கு எப்படி பணம் வழங்குவது என்று. இது ஜனநாயகத்தை ஒரு கேலி செய்கின்ற செயலாக இலங்கையிலே ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள எல்லா மக்களும் பார்க்கிறார்கள்.

எனவே மக்களினுடைய இறையாண்மையை உறுதிப்படுத்துகின்ற இந்த தேர்தல் நிச்சயமாக நடத்தப்பட வேண்டும்.

இன்றைய சூழ்நிலையிலே ஒரே ஒரு காரணத்தை தான் இந்த அரசாங்கம் சொல்லுகின்றது.

அரசாங்கம் வங்குரோத்து நிலைக்கு எவ்வாறு வந்தது என்று மக்களுக்கு தெரியும் அப்படி இருந்தும் கூட ஜனநாயகத்தை பாதுகாப்பது மக்களுடைய தேர்தல் உரிமைகளை பாதுகாப்பது ஒரு அரசினுடைய கடமை அந்தக் கடமையை செய்யாமல் இந்த அரசாங்கம் எடுத்து அடித்துக் கொண்டு இன்று ஒரு ஜனநாயக விரோத போக்கை மேற்கொண்டு இருக்கின்றது குறிப்பாக இந்த நாட்டினுடைய ஜனாதிபதி இந்த தேர்தல் நடத்துவதற்கு மிகவும் முட்டுக்கட்டையாக இருக்கிறார்.

அவர் நிதி அமைச்சை வைத்துக்கொண்டு உண்மையிலேயே இந்த நிதியமைச்சர் நிதியமைச்சராக இருக்க முடியாது.

21வது அரசியலமைப்பு மாற்றப்பட்ட பின்னர் ஜனாதிபதி அவர்கள் பாதுகாப்பு அமைச்சியை மாத்திரம் தான் வைத்துக் கொள்ளலாம் அப்படி இருந்தும் கூட ஜனாதிபதி அவர்கள் நிதி அமைச்சை வைத்துக்கொண்டு அந்த அமைச்சினூடாக இந்த தேர்தலை நடத்தாமல் செய்வதற்கு எல்லா விதமான முயற்சிகளையும் மேற்கொண்டு இருக்கின்றார்.

ஆரம்பத்திலேயே இந்த தேர்தல் நடத்துவதற்கு கட்டுப்பணம் செலுத்துவதற்கு சில நாட்களுக்கு முன்னர் பொது நிர்வாக அமைச்சினுடைய செயலாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது கட்டுப்பணத்தை தெரிவு அத்தாட்சி உத்தியோகத்தர்கள் பெறக் கூடாது.

அது உண்மையிலேயே இந்த ஜனநாயக முறையிலே சுயாதீன ஆணைக்குழுவான தேர்தல் ஆணைக்குழுவினுடைய சுதந்திர தன்மையிலே மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு உத்தரவாக அமைந்திருந்தது. மீண்டும் ஜனநாயக அமைப்புகள் அழுத்தத்தின் காரணமாக அந்த உத்தரவு மீள் பெறப்பட்டது.

இன்று திரைசெரியினுடைய செயலாளர் கூறுகின்றார்.

ஜனாதிபதி அவர்கள் ஒரு மந்திரிசபை பத்திரத்தை சமர்ப்பித்திருக்கின்றார் அந்த மந்திரிசபை பத்திரத்திலேயே சொல்லப்பட்டிருக்கின்றது அத்தியாவசிய சேவைகள் தவிந்த ஏனைய சேவைகளுக்கு நிதி வழங்கக்கூடாது.
என்கின்ற கடுமையான ஒரு கட்டுப்பாட்டை மந்திரிசபை பத்திரத்தை அவர் சமர்ப்பித்து அதற்குரிய ஒப்புதலையும் பெற்றுள்ளார். எனவே இந்த ஜனாதிபதி அவர்கள் இந்த தேர்தலை நிச்சயமாக ஒத்திவைக்க வேண்டும் என்கின்ற ஒரு முனைப்புடன் செயல்பட்டு வருகின்றார். என்பது இலங்கையில் உள்ள அனைத்து மக்களுக்கும் தெரிந்தது.

ஆனால் இந்த தேர்தல் நிச்சயமாக நடத்தப்பட வேண்டும் தபால் வாக்களிப்புக்கான திகதி பிற்போடப்பட்டுள்ளது தேர்தல் இதுவரையில் ஒத்திவைக்கப்பட்டவில்லை. ஆனால் வாக்களிப்புக்கான திகதி தான் மாற்றப்பட்டு இருக்கின்றன எனினும் அண்மையிலே வெளியிடப்பட்ட தேர்தல் ஆணைக்குழுவின் முடிவின்படி தேர்தல்
பிற்போடப்பட்டு அதற்குரிய புதிய திகதி 03 திகதி அறிவிக்கப்படும் என்று கூறியிருக்கின்றார்.

எனவே நிச்சயமாக நான் நினைக்கின்றேன் இந்த நாட்டுடைய ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு இந்த நாட்டினுடைய மக்களுடைய நிலைமையை பாதுகாப்பதற்கு சுயாதீன ஆணை குழுவான தேர்தல் ஆணைக்குழு மிகவும் இதய சுத்தியுடன் தொழிற்பட வேண்டிய ஒரு கடப்பாடு இருக்கின்றது.

அந்த தேர்தல் நடத்துகின்ற குலாமும் அதனுடைய தலைவரும் இந்த விடயத்தில் மக்களோடு நின்று மக்களுடைய ஜனநாயக உரிமை பாதுகாப்பதற்கு சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கின்றேன்.

இந்த தேர்தல் எந்த விதத்திலேயும் பிற்போட்டடால் இந்த நாட்டிலே பாரிய இரத்த கலரி ஏற்படும் ஜனநாயக அமைப்புகள் எல்லாம் ஒன்று திரண்டு வரும் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒரு குடையின் கீழே ஒன்றுபட்டு இந்த நாட்டிலே பாரிய புரட்சி ஒன்று ஏற்படக்கூடிய ஒரு சூழ்நிலை இருக்கின்றது. இந்த சந்தர்ப்பத்திலே சர்வதேசத்தின் நோக்கம் கண் பார்வையும் இன்று இலங்கை பக்கம் திரும்பியிருக்கிறது.

எனவே அவர்கள் இந்த எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற இந்த IMF மூலம் பெறப்போகின்ற அந்த கடன் உதவி சர்வதேச நாணய நிதியத்தின் நிதி கூட இவர்களுக்கு கிடைக்க முடியாத ஒரு சூழ்நிலை ஏற்படுகின்றது.

அண்மையிலேயே ஒரு முக்கிய உறுப்பினர் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.. இந்த நாட்டினுடைய ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் ஜனநாயக முறையிலே நடக்கின்ற சகல தேர்தலும் நடத்தப்பட வேண்டும் அதன் பிற்பாடுதான் IMF சர்வதேச நாணய நிதியம் தங்களுடைய ஒத்துழைப்பை இலங்கைக்கு வழங்கும் என்பதை தெரிவித்து இருந்தார்.

எனவே இந்த அரசாங்கம் எத்தகைய முயற்சிகளை எடுத்தாலும் இந்த தேர்தல் நிச்சயமாக நடத்தப்பட வேண்டிய ஒன்று இலங்கை மக்கள் அனைவரும் ஜனநாயகத்திலே நம்பிக்கை உள்ள எல்லா மக்களும் இந்த சந்தர்ப்பத்திலே போராடி இதிலே வெற்றி காண்பது என்பதில் எனக்கு எந்த விதமான ஐயமும் இல்லை.

AR

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image