இலங்கை கடற்பரப்பிற்குள் ஊடுருவிய 11 தமிழக மீனவர்களும் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையுடன் விடுவிக்கப்பட்டனர்.
தமிழ்நாடு மயிலாடுதுறை மாவட்டம் கோடியக்கரையைச் சேர்ந்த ஐந்து மீனவர்களையும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதா பட்டினத்தை சேர்ந்த ஆறு மீனவர்களையும் என மொத்தம் 11 மீனவர்களையும் 10 வருடங்களிற்கு ஒத்தி வைக்கப்பட்ட 18 மாத சிறை நிபந்தனையுடன் விடுதலை செய்து ஊர்பாவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டது.
கோடியக்கரை மீன்பிடித்துறைமுகத்திலிருந்து கடந்த 3 ஆம் திகதி மீன்பிடிக்க புறப்பட்ட மீனவர்கள் எல்லை தாண்டி நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது ,ஒரு மீன்பிடி விசைப்படகையும் அதிலிருந்த 5 மீனவர்களையும் கடற்படையினர் சிறைப் பிடித்து மயிலட்டி துறைமுகத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இன்று வரை சிறைக்காவலில் வைக்க ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டருந்தனர்.
அதேபோல் கடந்த 11 ஆம் திகதி மாலை எல்லை தாண்டி காரைநகர் கடற்பரப்பில் வைத்து கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப் பட்டினத்தைச் சேர்ந்த ஆறு மீனவர்களும் விசாரணைக்கு பின் நீதிமன்ற உத்தரவுபடி இன்று வரை யாழ்ப்பாணம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இவ்வாறு தடுத்து வைக்கட்டிருந்த தமிழக மீனவர்கள் 11 பேருக்கும் எதிராக இன்று கடற்றொழில் நீரியல் திணைக்கள அதிகாரிகள் குற்றப்பத்திரம் தாக்கல் செய்தனர்.
இதன்போது எல்லை தாண்டி இலங்கையை கடற் பரப்புக்குள் அத்துமீறி நுழைந்தமை, தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்தமை மற்றும் மீன் வளங்களை சேதப்படுத்திய குற்றங்களின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது மீனவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டமையினால் 10 ஆண்டுகளிற்கு ஒத்தி வைக்கப்பட்ட 18 மாத சிறைத் தண்டனையும்.
இரு படகுகளின் உரிமையாளர்களும் படகில் இருந்தமையினால் படகுகள் அரச உடமையாக்கப்பட்டன.
இதேநேரம் மீனவர்களின் தனி உடமை பொருட்களை மீள கையளிக்குமாறும் நீதிபதி கஜநிதிபாலன் உத்தரவிட்டார்.
TL