Home » 100 மணிநேரம் கடலில் தவித்த ஈழ அகதிகள்.

100 மணிநேரம் கடலில் தவித்த ஈழ அகதிகள்.

Source

ந.லோகதயாளன்.

இலங்கையில் இருந்து உயிர் பிழைக்க  இந்தியாவிற்கு தப்பிச் சென்ற 8 பேர் 3 தினங்களாக நடுக்கடலில தத்தளித்து தம்மை காக்குமாறு கோரிய நிலையில் இன்று காலை  9 மணிக்கே  மீட்கப்பட்டனர்.

இலங்கையின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில்  இருந்து தமிழகம் நோக்கி படகில் ஏற்றிச் செல்லப்பட்ட 8பேரையும இலங்கை படகு ஓர் திடலில் இறக்கி விட்டுத் திரும்ப்பிய நிலையிலேயே 8 பேரும் 3 தினங்களாக உணவோ அல்லது குடிநீரோ இன்றித்  தவிப்பதாகவும் இதில் நான்குபேர் சிறுவர்கள் என திடலில் தவித்தவர்கள்  தெரிவித்தனர்.

இதேநேரம் குறித்த விடயம் முதலில்  இரு நாட்டு கடற்படையினரின் கவனத்திறகும் கொண்டு செல்லப்பட்டு தேடுதல் இடம்பெற்று 8 பேரும் இந்தியாவின கட்டுப்பாட்டில் உள்ள 3ஆம் தீடையில் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இவ்வாறு உறுதி செய்யப்பட்டவர்களை மீட்குமாறு நேற்று மாலை 6 மணிமுதல் கோரிக்கை விடப்பட்டது. இருந்தபோதும்  இன்று காலை 9  மணிக்கே இந்திய கரையோர காவலபடையினர் குறித்த 8 பேரையும் படகில் ஏற்றியுள்ளனர்.

ஆபத்து நிறைந்த கடல் பயணத்தை மேற்கொண்டு தொடர்புகள் அற்ற பிரதேசத்தில் அந்தரிப்பு பயணங்களை மேற்கொண்டும் தமிழ் நாட்டில் முகாமில் அடைபட்டே வாழ வேண்டும் என்பதனை அறிந்தும் மக்கள் அதிக பணத்தை செலுத்தி பயணிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
TL

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image