இலங்கை கடற்பரப்பில் தத்தளித்த 104 ரோகிங்கியர்களும் காங்கேசன்துறை கடற்படை முகாமில் மருத்துவப் பரிசோதனையின் பின்பு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பர்மாவில் இருந்து விரட்டப்பட்ட ரோகிங்கிய இன முஸ்லீம்கள் இந்தோனேசியாவிற்கு பயணித்த சமயம் நடுக்கடலில் படகு பழுதடைந்து தத்தளித்த சமயம் யாழ்ப்பாணம் மீனவர்கள் அவதானித்து கடற்படையினருக்கு தகவல் வழங்கினர். இதனையடுத்து நேற்று மாலை சம்பவ இடத்திற்கு கடற்படையினர் சென்றிருந்தனர்.
இதேநேரம் இன்று காலை ரோகிங்கியர்கள் அனைவரும் கடற்படையினரின் படகில் ஏற்றப்பட்டு காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டனர்.
[embedded content]
இவ்வாறு கொண்டு வரப்பட்ட 104 பேரும் பங்களாதேசில் தங்கியிருந்து இந்தோனேசியா சென்ற சமயமே இலங்கை கடற்பரப்பிற்குள் படகு பிரவேசித்துள்ளது. 104 பேரும் பங்களாதேஸ் நாட்டில் யு.என்.எச்.சி.ஆரின் பொறுப்பில் இருந்தமைக்கான பதிவு அட்டைகளை உடமைகள் காணப்பட்டது.
இவ்வாறு கொண்டு வரப்பட்ட 104 பேரையும் யாழில் உள்ள யு.என்.எச்.சி.ஆரின் பிரதிநிதிகள் மற்றும் தெல்லிப்பளை பிரதேச செயலாளர் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
TL