Home » 13ஐ நிறை­வேற்­று­மாறு இந்­தியா நிபந்­தனை; இலங்கை ஏற்­காது – ரோஹித அபே­கு­ண­வர்த்­தன

13ஐ நிறை­வேற்­று­மாறு இந்­தியா நிபந்­தனை; இலங்கை ஏற்­காது – ரோஹித அபே­கு­ண­வர்த்­தன

Source
இந்­தியா, இலங்­கைக்கு நிபந்­த­னை­களை விதிக்­கின்­றது. நாட்­டுக்கு ஒவ்­வாத 13ஆவது திருத்­தச் சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­தச்­சொல்­கின்­றது. இலங்­கை­யில் தமிழ் மக்­கள் மட்­டு­மல்ல சிங்­கள மற்­றும் முஸ்­லிம் மக்­க­ளும் வாழ்­கின்­ற­னர் என்­பதை இந்­தியா உணர்ந்­து­கொள்­ள­வேண்­டும் – இவ்­வாறு சிறி­லங்கா பொது­ஜன பெர­மு­ன­வின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ரோஹித அபே­கு­ண­வர்த்­தன தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:– இலங்­கைக்கு இந்­தியா எவ்­வ­ளவு முக்­கி­ய­மா­னதோ அதே­போல் சீனா­வும் முக்­கி­யம். இலங்­கை­யின் அபி­வி­ருத்­தி­யில் சீனா பெரும் பங்­கு­வ­கிக்­கின்­றது. இந்­தி­யா­வும் தன்­னால் இயன்ற உத­வி­களை இலங்­கைக்கு வழங்­கி­வ­ரு­கின்­றது. ஆனால், இந்­தியா நிபந்­த­னை­க­ளு­டன்­தான் உத­வி­கள் வழங்­கு­கின்­றது.  சீனா இலங்­கைக்கு நிபந்­த­னை­கள் எத­னை­யும் விதிப்­ப­தில்லை. இந்­தி­யா­வின் நிபந்­த­னை­கள் அர­சி­யல் நிபந்­த­னை­க­ளா­கும். இலங்­கைக்கு ஒவ்­வாத 13 ஆவது திருத்­தச் சட்­டத்­தின் பரிந்­து­ரை­களை முழு­மை­யாக நிறை­வேற்­று­மாறு இலங்­கைக்கு இந்­தியா நிபந்­தனை விதிப்­பதை ஒரு­போ­தும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. அதே­போல் இலங்­கை­யில் தமிழ் மக்­கள் மட்­டு­மல்ல சிங்­கள மக்­க­ளும், முஸ்­லிம் மக்­க­ளும் அதி­க­ள­வில் வாழ்­கின்­றார்­கள் என்­பதை இந்­தியா மறக்­கக்கூடாது – என்­றார். Tl
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image