Home » 15 நாட்டுத் தூதுவர்கள் வடக்கு நிலவரத்தை கேட்டறிந்தனர்.

15 நாட்டுத் தூதுவர்கள் வடக்கு நிலவரத்தை கேட்டறிந்தனர்.

Source

இலங்கைக்கான 15 நாட்டுத் தூதுவர்கள் யாழில் மாவட்டச் செயலாளர், தொண்டு நிறுவனங்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.

வடக்கு மாகாண ஆளுநரின் ஏற்பாட்டில் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.

இவ்வாறு இடம்பெற்ற கலந்துரையாடல் 3 கட்டமாக இடம்பெற்றது. இதில் உத்தியோகத்தர்கள், தொண்டு நிறுவனங்கள், பொது நிறுவனங்கள் மற்றும் மீள்குடியேற்ற அமைப்புக்கள் என 3 கட்டமாக இச் சந்திப்பு இடம்பெற்றது.

இலங்கைக்கு புதிதாக நியமனம் பெற்று வரும் சுவிற்சர்லாந்து, பிரான்ஸ், ஜோர்டான், அவுஸ்திரேலியா, ஜேர்மனி, லெபனான், குவைற் உட்பட 15 நாட்டுத் தூதுவர்கள் இச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

இதன்போது வடக்கு மாகாண சபைக்கு உட்பட்ட அதிகாரிகளிடம் வடக்கின் நிலவரம், வடக்கின் தேவைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டதோடு யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபரிடமும் மீள்குடியேற்ற அமைப்புக்களிடமும் மேலதிக விபரங்களை கேட்டறிந்துகொண்டனர்.
TL

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image