Home » 16 மாவட்டங்கள் டெங்கு எச்சரிக்கை வலயங்களாக பெயரிடப்பட்டுள்ளன

16 மாவட்டங்கள் டெங்கு எச்சரிக்கை வலயங்களாக பெயரிடப்பட்டுள்ளன

Source
Share Button

16 மாவட்டங்களைச் சேர்ந்த 83 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகள் டெங்கு எச்சரிக்கை மிகுந்த வலயங்களாக இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளரான விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். அதிகூடுதலான டெங்கு எச்சரிக்கை நிலவும் மாவட்டமாக கொழும்பு பெயரிடப்பட்டுள்ளது. இங்கு 18 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகள் எச்சரிக்கை மிகுந்த இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
அடுத்தபடியாக கம்பஹா, களுத்துறை, கண்டி, காலி, யாழ்ப்பாணம், இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களும் டெங்கு எச்சரிக்கை மிகுந்த வலயங்களாக பெயரிடப்பட்டுள்ளன. நாடளாவிய ரீதியில் இனங்காணப்படும் டெங்கு நோயாளர்களில் 51 வீதமானோர் மேல் மாகாணத்திலேயே இனங்காணப்பட்டுள்ளனர். 26 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இனங்காணப்பட்டிருக்கின்றார்கள்.
மேல் மாகாணத்தில் டெங்கு நோயைக்கட்டுப்படுத்தும் நோக்கில் எதிர்வரும் புதன்கிழமையில் இருந்து விசேட டெங்கு ஒழிப்பு வாரம் அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த காலப்பகுதியில் தங்களின் சுற்றுப்புறச் சூழலை டெங்கு நுளம்புகள் பரவாத வகையில் துப்பரவு செய்வது அவசியம் என்று விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். எவருக்காவது 24 மணிநேரங்களுக்கு மேலாக காய்ச்சல் நிலவும் பட்சத்தில் வைத்தியரை நாடி சிகிச்சை பெறவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word
Anti-Spam Image