1978ஆம் ஆண்டின் இலக்க பகிடிவதை தடுப்புச் சட்டத்தில், அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் திருத்தங்கள்

1978ஆம் ஆண்டின் இலக்க பகிடிவதை தடுப்புச் சட்டத்தில், அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் திருத்தங்கள் கொண்டுவரப்படும் என அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. இத்திருத்தங்கள் புதியவர்களை இலக்காகக் கொண்டவை மட்டுமல்ல, பல்கலைக்கழக கட்டமைப்பை மாற்றுவதற்கான விதிமுறைகளையும் உள்ளடக்கியதாக இருக்கும் என இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
பெரும்பாலான பாடசாலைகளில் போதிய ஆங்கிலம் மற்றும் கணித ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்கள் கலை பாடங்களை தேர்வு செய்வதை தவிர வேறு வழியில்லை என்ற நிலை காணப்படுகிறது.
எனவே, பல்கலைக்கழக அனுமதி மற்றும் தற்போதுள்ள கல்வி முறைமை மாற்றப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச பல்கலைக்கழகங்கள் மற்றும் தெற்காசிய வளாகங்களை உள்ளூர் பல்கலைக்கழக அமைப்பிற்குள் கொண்டுவர அரசாங்கம் முயற்சித்து வருகிறது. இது தொடர்பாக ஐந்து சர்வதேச பல்கலைக்கழகங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டு வருகிறது.
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் பம்பாய் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆகியவற்றுடன் இலங்கை ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.
அத்துடன், ஜெர்மனி, ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய மூன்று தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களுடனும் கலந்துரையாடல் நடத்தப்படுவதாகவும் சுரேன் ராகவன் குறிப்பிட்டுள்ளார்.
