2022ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பை தயாரிக்கும் பணிகள் ஆரம்பம்.

2022 வாக்காளர் இடாப்பில் இதுவரை தமது பெயரை பதிவு செய்யாதவர்கள் இன்று தொடக்கம் தம்மைப் பதிவு செய்து கொள்ள முடியும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. எதிர்வரும் ஜூலை 12ஆம் திகதி வரை இதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் இணையத் தளத்திற்குச் சென்று இதற்காக விண்ணப்பிக்க முடியும். கிராம உத்தியோகத்தர்களிடமும் இது தொடர்பான மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
