2022ம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் தமது பெயர்கள் உள்ளனவா? என்பதை கவனத்துக் கொள்ளுமாறு வாக்காளர்களுக்கு அறிவுறுத்தல்

2022ம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் தமது பெயர்கள் உள்ளனவா? என்பதை கிராம உத்தியோகத்தர் மூலம் விசாரித்துக் கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணையாளர் அலுவலகம் வாக்காளர்களைக் கேட்டுள்ளது. www.elections.gov.lk என்ற இணையத்தளத்திலும் இதனைப் பரீட்சித்துக் கொள்ள முடியும். வாக்காளர் இடாப்பில் பெயர் இல்லையென்றால் ஜுலை மாதம் 12ம் திகதிக்கு முன்னர் 0112-86-00-31 என்ற தொலைபேசி இலக்கத்தைத் தொடர்பு கொண்டு அது பற்றி விசாரிக்க முடியும் என தேர்தல்கள் ஆணையகம் குறிப்பிட்டுள்ளது.
