2022 சர்வதேச நீர்மாநாடு இம்முறை இலங்கையில் இடம்பெறவுள்ளது

2022 சர்வதேச நீர்மாநாடு இம்முறை இலங்கையில் இடம்பெறவுள்ளது. இரத்மலானை நீர் வழங்கல் சர்வதேச கேட்போர் கூடத்தில் இது ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 2.30ற்கு ஆரம்பமாகும் இந்த நிகழ்வில் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல பிரதம அதிதியாகக் கலந்துகொள்வார். குடிநீர் தொடர்பான நூற்றுக்கும் அதிகமான புத்திஜீவிகளும் பொறியியலாளர்களும் இதில் பங்கேற்கவுள்ளார்கள். 48 நாடுகளின் நிபுணர்களும் இதில் பங்கேற்கவுள்ளமை சிறப்பம்சமாகும்.
