Home » 2022 இல் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 45% வீழ்ச்சி!

2022 இல் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 45% வீழ்ச்சி!

Source

2022ஆம் ஆண்டில், அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி கிட்டத்தட்ட 45% குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது.

அதன்படி, 2022 ஆம் ஆண்டில் அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு 44.8% குறைந்துள்ளது. அதே நேரத்தில் யூரோவுக்கு நிகராக 41.4%, இந்திய ரூபாய்க்கு நிகராக 38.6%, ஸ்டெர்லிங் பவுன்சுக்கு நிகராக 38.1% மற்றும் ஜப்பானிய யெனுக்கு நிகராக 36.4% ரூபாய் வீழ்ச்சிகண்டுள்ளது.

வாராந்திர பொருளாதார குறிகாட்டிகள் அறிக்கையின் சமீபத்திய பதிப்பில் இந்த புள்ளிவிவரங்கள் மத்திய வங்கியால் வெளியிடப்பட்டுள்ளது.

N.S

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image