Home » 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது

Source
Share Button

நிலையான, நீண்ட கால பொருளாதார வளர்ச்சியை நோக்காகக் கொண்டு தயாரிக்கப்பட்ட 2023ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.
2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், மூலதனச் சந்தை, ஏற்றுமதிச் சந்தை, தொழிலாளர் சந்தை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் ஆகிய துறைகள் குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளதுடன், சமூக சந்தைப் பொருளாதாரத்தின் ஊடாக வரவு செலவுத் திட்ட இலக்குகளை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சமூக நலன்கள், கட்டாயம் தேவைப்படும் மக்களுக்கு வழங்குவது மற்றும் நாட்டின் பொருளாதாரத்தின் உந்து சக்தியாக தனியார் துறையை கட்டியெழுப்புவதற்கான கொள்கை பின்புலத்தை உருவாக்குவது குறித்தும் அதிக கவனம் செலுத்தப்படும்.
2023 வரவு செலவு திட்ட முன்மொழிவுகள் மூலம் நவீன உலகிற்கு ஏற்ற நவீன பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கையை ஆரம்பிப்பதன் மூலம் இளைஞர்களுக்காக நாட்டைக் கட்டியெழுப்பும் புதிய வேலைத்திட்டம் உருவாக்கப்பட உள்ளது.
இதனிடையே, வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகும். இதற்கான வாக்கெடுப்பு எதிர்வரும் 22ஆம் திகதி மாலை 5 மணிக்கு இடம்பெறும். வரவு செலவுத் திட்டம் தொடர்பான குழுநிலை விவாதம் எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பமாகும். அதன் வாக்கெடுப்பு அடுத்த மாதம் எட்டாம் திகதி நடைபெறவுள்ளது.
இதேவேளை, வரவு செலவுத்திட்டம் சம்ரப்பிக்கப்படும் இன்றைய தினம் விசேட பாதுகாப்பு ஒழுங்குகள் நடைமுறைப்படுத்தப்படும். இராஜதந்திரிகள் மாத்திரம்; பொதுமக்கள் கலரிக்கு அனுமதிக்கப்படுவார்கள். பாராளுமன்ற வாகனத் தரிப்பிடம் குறித்த தினத்தில் மூடப்பட்டிருக்கும். அத்துடன் பொலிஸ் போக்குவரத்தப் பிரிவு விசேட போக்குவரத்து ஒழுங்குகள் முன்னெடுக்கும்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image