2048ஆம் ஆண்டளவில் கடன் அற்ற நாடொன்றை உருவாக்க முன்வருமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்

2023 ஆம் ஆண்டு தொடக்கம் 2048 ஆண்டு வரையிலான 25 ஆண்டுகளுக்குள் இலங்கையை வலுவான, செல்வந்த நாடாக கட்டியெழுப்புவது அவசியம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கங்கள் மாறினாலும் கொள்கைகள் மாறுபடாத பொருளாதாரக் கொள்கையை ஏற்படுத்துவது அவசியமாகும் என்று அவர் கூறினார். ஐக்கிய தேசியக் கட்சியின் 76ஆவது நிறைவாண்டு நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரையாற்றினார.; உணவுப் பாதுகாப்புக்கான திட்டமும் தற்சமயம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் பயிர்ச்செய்கையை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பெரும் போகத்திற்கு தேவையான உரம், எரிபொருள், விதைகள் என்பனவும் வழங்கப்பட்டவிருக்கின்றன தற்போதைய நெருக்கடியிலிருந்து நாட்டை மீற்பதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பும் அவசியம் என்றும் ஜனாதிபதி கூறினார்.
தேசிய ஒற்றுமை நாட்டுக்கு அவசியம் என்று நிகழ்வில் உரையாற்றிய ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர்
வஜிர அபேவர்தன தெரிவித்தார். இணைந்து செயற்படுவதன் மூலம் நாட்டை ஆசியாவில் உயர்ந்த இடத்திற்கு எடுத்துச் செல்ல முடியும் எனவும் இதனால் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற தயாராக வேண்டும் என்றும் வஜிர அபேவர்தன அழைப்புவிடுத்தார்
