Home » 22 ஆயிரம் மெற்றிக் தொன் யூரியா உரத்தை ஏற்றிய கப்பல் நாளை இலங்கை வரவுள்ளது

22 ஆயிரம் மெற்றிக் தொன் யூரியா உரத்தை ஏற்றிய கப்பல் நாளை இலங்கை வரவுள்ளது

Source
Share Button

உலக வங்கியின் கடனுதவியின் கீழ், 22 ஆயிரம் மெற்றிக் தொன் யூரியா உரத்தை ஏற்றிய மற்றுமொரு கப்பல் எதிர்வரும் திங்கட்கிழமை கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது. 2022ஃ2023 பெரும்போகத்தின் போது, நெல் மற்றும் சோளச் செய்கைக்காக யூரியா உர கொள்வனவிற்காக 105 மில்லியன் டொலர் கடனுதவியை வழங்க உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. அந்தக் கடனுதவியின் கீழ், பெறப்படும் இரண்டாவது தொகுதி உரம் இதுவாகும். இதற்கு முன்னர். 13 ஆயிரம் மெற்றிக் தொன் யூரியா உரம் நாட்டிக்குக் கிடைத்துள்ளது. யூரியா உரத்தின் முதல் தொகுதி சீனாவில் இருந்தும், இரண்டாவது தொகுதி உரம் மலேசியாவிலிருந்தும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. பெரும்போகத்திற்காக 20 ஆயிரம் மெற்றிக் தொன் யூரியா உரம் தருவிக்கப்படுகிறது. 566 விவசாய சேவை மத்திய நிலையங்களின் ஊடாக யூரியா உர விநியோகம் முன்னெடுக்கப்படுகின்றன. விதைக்கப்பட்டு, 14 நாட்களுக்குள் பயன்படுத்தப்படும் யூரியா உரம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்கள் தவிர்ந்த அனைத்து மாவட்டங்களுக்கு இந்தத் யூரியா தொகை வழங்கப்பட்டுள்ளது.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image