22 ஜனநாயக விரோதமானது, நாங்கள் மக்களுடன் வீதியில் இறங்குகிறோம் – ஸ்ரீ.ல.சு.க

புதிய அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் 19வது அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்துவதாக அரசாங்கம் அறிவித்திருந்த போதிலும் தற்போது அரசாங்கம் 19வது அரசியலமைப்புக்கு முற்றிலும் மாறுபட்ட திரிபுபடுத்தப்பட்ட திருத்தத்தை முன்வைத்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். உத்தேச 22வது திருத்தம் ஜனநாயக விரோதமானது என்ற தகவல் கிடைத்துள்ளதாகவும் சிறிசேன கூறுகிறார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்கும் வகையிலும், பாராளுமன்றத்தின் அதிகாரத்தை பலப்படுத்தும் வகையிலும் திருத்தம் கொண்டுவரப்படுமென மக்கள் எதிர்பார்த்ததாகவும் எனினும் அந்த எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே அவ்வாறான திருத்தத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவு கிடைக்காது என முன்னாள் ஜனாதிபதி கூறுகிறார்
Previous articleஇலங்கையில் இருந்து தமிழகத்திற்கு அகதியாகச் செற்ற மூதாட்டி சிகிச்சை பலனின்றி பரிதாபகரமாக உயிரிழந்தார்.Next articleபலத்த காற்று மற்றும் கடல் அலைகள் -வானிலை அறிவிப்பு!