குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இன்றுமுதல் வழங்கப்படும் அரிசி, இந்த நாட்டு விவசாயிகளின் உற்பத்தியாகும் என்பது விசேடமான ஒன்றாகும் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அதன் கீழ் இந்த மாதமும், அடுத்த மாதமும் தலா பத்து கிலோ அரிசி வழங்கப்படுகிறது. 29 லட்சம் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவசமாக அரிசி வழங்கும் வேதை;திட்டம் இன்று முதல் அமுல்படுத்தப்படுவதாக தேசிய வானொலியில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு அமைச்சர் தெரிவித்தார்.