36 ஆயிரம் மெற்றிக்தொன் சேற்றுப்பசளையை ஏற்றிய கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது

நெற்செய்கைக்குத் தேவையான 36 ஆயிரம் மெற்றிக்தொன் சேற்றுப்பசளையை ஏற்றிய கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. சேற்றுப்பசளையை ஏற்றிய மேலும் சில கப்பல்கள் நாட்டிற்கு வரவுள்ளதாகவும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் விவசாய அமைப்பின் பங்களிப்பில் இந்த சேற்றுப்பசளை கிடைக்கப்பெற்றுள்ளது.
12 இலட்சம் விவசாயிகளுக்கு சேறறுப்;பசளை இலவசமாக வழங்கப்படும் என்று விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். விவசாய திணைக்களத்தின் சிபாரிசுக்கு அமைய ஒரு ஹெட்டெயருக்கு 55 கிலே சேற்றுப்பசளை வழங்கப்படும். மூன்று போகங்களின் பின்னர் சகல உரங்களும்; ஒரே தடவையில் கிடைக்கவிருக்கும்; போகமாக எதிர்வரும் போகம் அமையவுள்ளது. இந்த உரத்தினை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகும்.
