நெல் உற்பத்திக்கு அத்தியாவசியமான உரமாக கருதப்படும் சேற்று உரம் என்றழைக்கப்படும் ட்ரிப்பல் சுப்பர் பொஸ்பேற் உரத்தை ஏற்றிய கப்பல் எதிர்வரும் 17ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது. இதன் மொத்த எடை 36 ஆறாயிரம் மெற்றிக் தொன்னாகும். நெல் உற்பத்திக்குத் தேவையான பொஸ்பரஸ், பொற்றாசியம் போன்ற தாதுப் பொருட்களை இதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியும். கடந்த போகத்தின் போது, போதிய அளவிலான தாதுப் பொருட்கள் இல்லாமையினால், நெல் உற்பத்தி பாதிப்படைந்ததோடு, நெற்பயிர்களிலும் நோய்கள் ஏற்பட்டிருந்ததாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் உரத்தை பரிந்துரைக்கு அமைய, தேவைக்கு ஏற்றவாறு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 12 லட்சம் விவசாயிகளுக்கு இறக்குமதி செய்யப்படும் சேற்று உரத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.