பாடசாலைகளுக்கு நாலாயிரத்து 800 அதிபர்களை நியமிக்க கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது. இதற்கு அரச சேவை ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். வெற்றிடங்களுக்கு விண்ணப்பித்த 10 ஆயிரம் பேர் வாய்மொழித் தேர்வுக்கு உட்படுத்தப்பட உள்ளனர்.
எதிர்வரும் நாட்களில் நேர்முகத் தேர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் ஆட்சேர்ப்பு நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏ தரம் மற்றும் மாகாணப் பாடசாலைகளில் உள்ள வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.