40 ஆயிரம் அரச ஊழியர்களுக்கு தகவல் தொழில்நுட்ப அறிவு வழங்கப்படவுள்ளது

அரச சேவையில் பணியாற்றும் 40 ஆயிரம் பேருக்கு அடுத்தாண்டு தகவல் தொழில்நுட்ப அறிவை வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று ராஜாங்க அமைச்சர் கணக்க ஹேரத் தெரிவித்துள்ளார். அரச சேவையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்குத் தேவையான தகவல் தொழில்நுட்பப் பயிற்சியை வழங்குவது இதன் நோக்கமாகும். எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்குள் ஒரு லட்சம் அரச ஊழியர்களுக்குத் தேவையான பயிற்சியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். கல்வியமைச்சு தற்சமயம் நவீன டிஜிற்றல் முறைமைக்கான கொள்கையொன்றைத் தயாரித்துள்ளது. அடுத்த வருடம் முதல் சாதாரணப் பரீட்சைக்கு தகவல் தொழில்நுட்பப் பாடமும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. பாடசாலையைவிட்டு இடைவிலகிய மாணவர்களுக்கான தகவல் தொழில்நுட்ப அறிவை வழங்கும் எதிர்பார்த்துள்ளதாக ராஜாங்க அமைச்சர் கூறினார்.
