41 ஆயிரம் மெற்றிக் தொன் உரத்தைக் கொண்டுவந்த கப்பல் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது – உரத்தைத் தரையிறக்கும் பணி இன்று முன்னெடுக்கப்படும்

.
வேளாண்மை கதிர் விசிறும் காலப்பிரிவில் பயிர்களுக்கு விசிற வேண்டிய 41 ஆயிரம் மெற்றிக் தொன் உரத்தை கொண்டு வரும் கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்தக் கப்பலில் உள்ள உரம் இன்று தரையிறக்கப்படும் என கொமேர்ஷல் உரக் கூட்டுத்தாபனத்தில் தலைவர் கலாநிதி ஜகத் பெரேரா தெரிவித்துள்ளார். குறித்த உரத்தினை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கும் நடவடிக்கை அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் கொழும்புத் துறைமுகத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.
இதேவேளை, ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் விவசாய அமைப்பினால் வழங்கப்பட்ட யூரியா உரத்தை ஏற்றிய கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. கப்பலிலுள்ள ஒன்பதாயிரம் மெற்றிக் தொன் உரத்தை தரையிறக்கும் பணி நேற்று ஆரம்பிக்கப்பட்டது. எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த குறைந்த வருமானம் பெறும் விவசாயிகளுக்கு இந்த உரம் பகிர்ந்தளிக்கப்படும்.
