Home » 69 ஆயிரத்து 500 கோடி ரூபா பெறுமதியான குறைநிரப்புப் பிரேரணை மீதான பாராளுமன்ற விவாதம் இன்று.

69 ஆயிரத்து 500 கோடி ரூபா பெறுமதியான குறைநிரப்புப் பிரேரணை மீதான பாராளுமன்ற விவாதம் இன்று.

Source
Share Button

பாராளுமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட 69 ஆயிரத்து 500 கோடி ரூபா பெறமதியான குறைநிரப்பு பிரேரணை மீதான விவாதம் இன்று இடம்பெறும். அத்தியாவசிய அரச சேவைகளை குறையின்றி முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான நிதியை வழங்கும் வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தக் குறைநிரப்புப் பிரேரணையை பாராளுமன்றத்தில் முன்வைத்தார். விவாதத்தின் பின்னர் இந்தப் பிரேரணையை நிறைவேற்ற எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார திருத்த நகல் சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பும் கனிய எண்ணெய் வளங்கள் சட்டமூலத்தின் சில கட்டளைகளும் பாராளுமன்றத்தில் நாளை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும். அண்மையில் இடம்பெற்ற குழப்ப நிலையின்போது கொலை செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகொளவிற்கு அனுபாதம் வெளியிடும் பிரேரணை எதிர்வரும் வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word
Anti-Spam Image